Thoothuvalai Dosai

தூதுவளை தோசை


தேவையானவை:
  •      பச்சரிசி- 1 கப்
  •      புழுங்கல் அரிசி- 1 கப்
  •      துவரம் பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்
  •      கடலை பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்
  •      தூதுவளை(இலைகள் மட்டும்)- 1 கப்
  •      பச்சை மிளகாய்- 6 அல்லது காய்ந்த மிளகாய்- 8
  •      உப்பு- தேவைக்கு
  •      எண்ணை- தேவைக்கு 

செய்முறை:
     அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாக ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வையுங்கள். பிறகு இதனுடன் சுத்தம் செய்த கீரை, மிளகாய் சேர்த்து நைசாக அரைத்தெடுத்து, உப்பு சேர்த்து கரைத்து மூன்று மணி நேரம் வைத்திருங்கள். புளித்துவிடும். பிறகு சற்று கனமான தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணை விட்டு, திருப்பிப் போட்டு வேக வைத்தெடுங்கள். தேங்காய் சட்னி, கார சட்னி, பூண்டு சட்னி... இவற்றோடு சாப்பிட சுவை கூடும்.