Spaicy Idiyaappam

ஸ்பைசி இடியாப்பம்

தேவையானவை:
  •      பச்சரிசி மாவு- 2 கப்
  •      மல்லித்தழை- 1 கட்டு
  •      பச்சை மிளகாய்- 3
  •      எலுமிச்சம்பழச்   சாரு- 1 டேபிள் ஸ்பூன்
  •      கறிவேப்பிலை- 10 இலைகள்
  •      நெய்- 2 டீ ஸ்பூன்
  •      உப்பு- தேவைக்கு

செய்முறை:
     மிளகாய், மல்லி, கறிவேப்பிலை, உப்பு, எலுமிச்சம் பழச்சாரு சேர்த்து மைபோல அரைத்தெடுங்கள். இந்த விழுதை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். வடிகட்டிய நீரை அடுப்பில் வைத்து தளதளவென்று கொதிக்க வைத்து இறக்குங்கள். மாவுடன் நெய், கொதித்த மசாலா நீர்(ஆரக்கூடாது) சேர்த்து பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து ஆவியில் வேக வையுங்கள். கமகமக்கும் இடியாப்ப வாசமே அதன் ருசியைச் சொல்லும். சாம்பார், கத்தரி கொத்சுடன் சாப்பிட சுவை கூடும்.