Paruppu Ravai Kolukkattai

பருப்பு ரவை கொழுக்கட்டை


தேவையானவை:
  •      அரிசி ரவை- 1/2 கப்
  •      துவரம் பருப்பு- 1/2 கப்
  •      உளுந்து- 1/2 கப்
  •      மிளகாய்- 6
  •      பெருங்காயம்- 1/2 டீ ஸ்பூன்
  •      தேங்காய் துருவல்- 1/2 கப்
  •      எண்ணை- 1 டேபிள் ஸ்பூன்
  •      நெய்- 1 டேபிள் ஸ்பூன்
  •      கடுகு 1 டீ ஸ்பூன்
  •      உளுந்து- 1 டீ ஸ்பூன்
  •      கறிவேப்பிலை- சிறிதளவு
  •      மல்லித்தழை- சிறிதளவு
  •      உப்பு- தேவைக்கு

செய்முறை:
     பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வையுங்கள். மிளகாய், பெருங்காயம் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். அத்துடன் இரண்டரை கப் தண்ணீர், உப்பு, தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து கரைத்து வையுங்கள். வாணலியில் எண்ணை, நெய் ஒன்றாக ஊற்றி காயவைத்து, கடுகு, உளுந்து தாளித்து, கரைத்து வைத்துள்ள பருப்பு கலவையை ஊற்றுங்கள். கலவை தளதளவென்று, சற்று கெட்டிய கொதிக்கும்போது, ஒரு கையால் அரிசி ரவையை சேர்த்துக்கொண்டே, இன்னொரு கையால் கட்டி இல்லாமல் கிளறுங்கள். கலவையில் தண்ணீர் வற்றியதும் பாத்திரத்தை மூடி வைத்து, மிதமான தீயில், 15 நிமிடம் வேக வைத்து இறக்குங்கள். சற்று ஆறியதும் சிறிது சிறிதாக மாவை எடுத்து, கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி பானையில் வைத்து 10 நிமிடம் வேக வையுங்கள். சட்னி, சாம்பார், தக்காளி தொக்கு எல்லாவற்றுடனும் சாப்பிடலாம்.