ஆப்பிள் பை
தேவையானவை:
- ஆப்பிள்- 4
- சர்க்கரை- 3/4 கப்
- ப்ரெட்- 12 முதல் 15 ஸ்லைஸ்
- பிரெஷ் கிரீம்- 1 கப்
- வெண்ணை- 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஆப்பிளை தோல், விதை நீக்கி பொடியாக நறுக்கி சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறுங்கள். கிளறும்போதே சற்று மசித்து விடுங்கள். சர்க்கரை நன்கு கரைந்து, சேர்ந்தாற்போல் வந்ததும் இறக்குங்கள். ப்ரெட்டின் ஓரங்களை நீக்கி மிக்ஸ்சியில் பொடியுங்கள். ஒரு பேக்கிங் பாத்திரத்தில் வெண்ணையை நன்கு தடவுங்கள். அதன் மேல் ப்ரெட் தூளை அரை அங்குல கனத்துக்கு போட்டு நன்கு அழுத்துங்கள். அதன் மேல் ஆப்பிள் கலவையை பரவினாற்போல் போடுங்கள். அதன் மேல் மீண்டும் ப்ரெட் தூளை கால் அங்குல கனத்துக்கு தூவி சற்று அழுத்துங்கள். 180 டிகிரி சென்டிகிரேடில் பொன்னிறமாகும் வரை பேக் செய்யுங்கள். பிரெஷ் க்ரீமுடன் பரிமாறுங்கள்.
'கேக் ஓவன்' இல்லாதவர்கள் கடாயில் மணல் போட்டு சூடுபடுத்தி, அதன் மேல் பேக்கிங் பாத்திரத்தை வைத்து, அரைமணி நேரம் மூடி வைத்து பேக் செய்யவும். மேற்புறம் பொன்னிறமானதும் எடுக்கவும்.