கோதுமை, பருப்பு தோசை
தேவையானவை:- கோதுமை மாவு- 2 கப்
- துவரம் பருப்பு- 1/2 கப்
- மல்லித்தழை- சிறிதளவு
- பச்சை மிளகாய் அல்லது மிளகாய் வற்றல்- 4
- சீரகம்- 1 டீ ஸ்பூன்
- உப்பு- தேவைக்கு
- எண்ணை- தேவைக்கு
செய்முறை:
பருப்பை குழைய வேக வையுங்கள். மல்லித்தழையை பொடியாக நறுக்குங்கள். மிளகாயுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்தெடுங்கள். பருப்பு மசியலுடன் மாவு, மல்லித்தழை, மிளகாய் விழுது, உப்பு, சீரகம், தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து, சற்று கனமான தோசைகளாக ஊற்றுங்கள். சுற்றிலும் எண்ணை விட்டு, திருப்பிப் போட்டு வேக வைத்தெடுங்கள். வெங்காயத் துவையல், மல்லி சட்னி, சாம்பார் போன்ற கார சார சமாச்சாரங்களைத் தொட்டுக் கொண்டால் நாக்கில் எச்சில் ஊரும்.