Pottu Kadalai kulambu

பொட்டுக்கடலை குழம்பு 



தேவையானவை:
  •      சின்ன வெங்காயம்- 5
  •      தக்காளி- 2 
  •      தேங்காய் துருவல்- கால் கப்
  •      பச்சை மிளகாய்- 5 அல்லது 6 
  •      பொட்டுக் கடலை- 1 டேபிள் ஸ்பூன் 
  •      மல்லித்தழை- 1 கைப்பிடி 
  •      உப்பு- தேவையான அளவு 
  •      எண்ணை- 2 டேபிள் ஸ்பூன் 
     தாளிக்க:
  • பட்டை- 1 துண்டு
  • எண்ணை- 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
     கொடுத்திருக்கும் பொருட்களில், சின்ன வெங்காயம் முதல் உப்பு வரை அனைத்தயும் காயும் எண்ணையில் போட்டு வதக்கி எடுத்து, ஆறவிட்டு அரைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் எண்ணையை காய வைத்து, பட்டையைத் தாளித்து, அரைத்த மசாலாவில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து ஊற்றுங்கள். 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். 
     இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சூப்பரான குழம்பு இது.