மூங்க்தால் பூரி
தேவையானவை:
- மைதா- 2 கப்
- பாசிப்பருப்பு- 1/2 கப்
- உப்பு- தேவைக்கு
- நெய்- 1 டேபிள் ஸ்பூன்
- மிளகாய்த்தூள்- 2 டீ ஸ்பூன்
- கரம் மசாலா- 1/2 டீ ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய மல்லித்தழை- 2 டேபிள் ஸ்பூன்
- எண்ணை- தேவைக்கு
செய்முறை:
பருப்பை சற்று அதிக நீர் சேர்த்து மலர(குழையக்கூடாது) வேக வைத்து, பிறகு தண்ணீரை வடித்து தனியே வையுங்கள். பருப்புடன் மாவு, உப்பு, நெய், மிளகாய்த்தூள், கரம் மசாலா, மல்லித்தழை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக பருப்பு நீரை ஊற்றி பிசையுங்கள். பிசைந்த மாவை சிறு சிறு பூரிகளாக தேய்த்து எண்ணையில் பொரித்தெடுங்கள். பனீர் மசாலா, உருளை மசாலா, தால், சட்னி வகைகளுடன் சாப்பிட்டால் சுவை அள்ளும்.