Mochchai Kichchadi

மொச்சை கிச்சடி


தேவையாவை:
  •      அரிசி ரவை- 2 கப்
  •      மொச்சை விதை- 1 கப்
  •      பெரிய வெங்காயம்- 2
  •      தக்காளி- 3 
  •      பச்சை மிளகாய்- 6
  •      இஞ்சி பூண்டு விழுது- 1 டேபிள் ஸ்பூன்
  •      புதினா- சிறிதளவு
  •      மல்லித்தழை- சிறிதளவு
  •      மஞ்சள்தூள்- 1/4 டீ ஸ்பூன்
  •      தேங்காய்ப்பால்- 1 கப்
  •      உப்பு- தேவைக்கு
     தாளிக்க:
  •      சோம்பு- 1/2 டீ ஸ்பூன்
  •      பட்டை- 2
  •      லவங்கம்- 2
  •      ஏலக்காய்- 2
  •      எண்ணை- 2 டேபிள் ஸ்பூன்
  •      நெய்- 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
     மொச்சையை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து தோலை நீக்குங்கள். வெங்காயம், தக்காளியை நறுக்குங்கள். மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள். அடி கனமான பாத்திரத்தில் நெய், எண்ணையை காய வைத்து தாளிக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களைச் சேர்த்து தாளியுங்கள். பிறகு மிளகாய், மொச்சை, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி வெங்காயம், சிட்டிகை உப்பு, புதினா, மல்லி சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பின்னர் தேவையான உப்பு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி தேங்காய்ப்பால், 5 கப் தண்ணீர் சேருங்கள். தண்ணீர் கொதித்ததும் ரவையை சேர்த்து கிளறி, பாத்திரத்தை மூடி வைத்து, 15 நிமிடம் வேக வைத்து இறக்குங்கள். தயிர் பச்சடியுடன் பரிமாறுங்கள்.