சேமியா தோசை
தேவையானவை:
- இட்லி மாவு- 4 கப்
- சேமியா- 100 கிராம்
- பெரிய வெங்காயம்- 4
- தக்காளி- 4
- புதினா- 1/2 கட்டு
- மல்லி- 1/2 கட்டு
- மிளகாய்த்தூள்- 2 டீ ஸ்பூன்
- சீரகத்தூள்- 2 டீ ஸ்பூன்
- கடுகு- 1 டீ ஸ்பூன்
- எண்ணை- தேவைக்கு
- உப்பு- தேவைக்கு
செய்முறை:
சேமியாவை ஒரு டீ ஸ்பூன் எண்ணையில் வறுத்து கொதித்த நீரில் போட்டு வேக வைத்து வடித்து வையுங்கள். (வறுத்த செமியாவாக இருந்தால் மீண்டும் வருக்க வேண்டாம்) வெங்காயம், புதினா, தக்காளி, மல்லியை பொடியாக நறுக்குங்கள். 2 டேபிள் ஸ்பூன் எண்ணையில் கடுகை தாளித்து, பெருங்காயம், தக்காளியை வதக்குங்கள். உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சுருள கிளறி பிறகு சேமியா, சீரகத்தூள் சேர்த்து கிளறி இறக்குகள். மாவை சற்று கனமான தோசைகளாக ஊற்றி அதன் மேல் சேமியா கரைசலை சற்று பரவலாக வையுங்கள். அதன் மேல் புதினா, மல்லியைத் தூவி சற்று அழுத்தி விடுங்கள். சுற்றிலும் எண்ணை விட்டு, இரு புறமும் திருப்பிப்போட்டு வேகவைத்தெடுங்கள். தேங்காய் சட்னியோடு பரிமாறுங்கள். பார்க்க, ரசிக்க, ருசிக்க... சூப்பர் தோசை இது.