பைன்ஆப்பிள் கேசரி
தேவையானவை:
- அன்னாசிப்பழம்- 1/4 பாகம்
- ரவை- 1 கப்
- சர்க்கரை- 2 கப்
- நெய்- 1/4 கப்
- எண்ணை- 1 டேபிள் ஸ்பூன்
- அன்னாசி எசன்ஸ்- 2 டீ ஸ்பூன்
- ப்புட் கலர்(மஞ்சள்)- 1/4 டீ ஸ்பூன்
- முந்திரிப்பருப்பு- 6
செய்முறை:
அன்னாசிப் பழத்தை தோல், முள் நீக்கி பொடியாக நறுக்குங்கள். அதனுடன் சர்க்கரை கலந்து, அரை மணி நேரம் வையுங்கள். ரவையை 2 டீ ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்தெடுங்கள். மீதமுள்ள நெய், எண்ணையை காய வைத்து முந்திரிப்பருப்பை போட்டு தாளித்து, 3 கப் தண்ணீர் சேருங்கள். அதில் மஞ்சள் கலர் சேர்த்து, தண்ணீர் கொதித்ததும் வறுத்த ரவையைச் சேர்த்து கட்டி படாமல் கிளறுங்கள். நன்கு கிளறியபின், தீயைக் குறைத்து 5 நிமிடம் நன்கு வேக விடுங்கள். பின்னர் அன்னாசி, சர்க்கரை கலவையையும் அதில் சேருங்கள். இது சற்று இளகி, மீண்டும் கெட்டிப்படும். அதை நன்கு கிளறி, எசன்ஸ் சேர்த்து கலந்து பரிமாறுங்கள். விருந்துகளுக்கு ஏற்ற, சுவையான ஸ்வீட் இது.