சேமியா ரவை கொழுக்கட்டை
தேவையானவை:
- சேமியா- 1 கப்
- வெள்ளை ரவை- 1 கப்
- மிளகாய்த்தூள்- 1 டீ ஸ்பூன்
- பெருங்காயத்தூள்- 1 டீ ஸ்பூன்
- தேங்காய்த்துருவல்- 1/2 கப்
- எண்ணை- 2 டேபிள் ஸ்பூன்
- நெய்- 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு- தேவைக்கு
- கடுகு- 1 டீ ஸ்பூன்
- உளுந்து- 2 டீ ஸ்பூன்
- கடலைப்பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி- 1 துண்டு
- பச்சை மிளகாய்- 3
- கறிவேப்பிலை- சிறிதளவு
செய்முறை:
வாணலியில் 1 டீ ஸ்பூன் எண்ணை விட்டு சேமியாவையும், மற்றொரு டீ ஸ்பூன் எண்ணையில் ரவையையும் தனித்தனியாக வருத்தேடுத்துக்கொள்ளுங்கள். இஞ்சியை பொடியாக நறுக்குங்கள். மீதமுள்ள எண்ணை, நெய்யை ஒன்றாக காய வைத்து கடுகு, உளுந்து, கடலைப்பருப்பை தாளியுங்கள். பொன்னிறமானதும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, 5 கப் தண்ணீர் ஊற்றுங்கள். அதில் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, பிறகு சேமியா சேர்த்து ஒரு நிமிடம் கிளறிய பிறகு ரவை சேருங்கள். தண்ணீர் வற்றியதும் மிதமான தீயில் மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கி ஆறியதும் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைத்தெடுங்கள். தக்காளித்தொக்கை தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் 'ஆஹா! அபாரம்' தான்.