Marakari Thosai Kulambu

மரக்கறி தோசை குழம்பு



தேவையானவை:
     தோசைக்கு: 
  •      கடலைப்பருப்பு- 1/4 கப் 
  •      துவரம்பருப்பு- 1/4 கப்
  •      பச்சரிசி- 1/4 கப்
  •      உளுத்தம்பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்
  •      காய்ந்த மிளகாய்- 3 
  •      நறுக்கிய சின்ன வெங்காயம்- 1/2 கப்
  •      பொடியாக நறுக்கிய மல்லித்தழை- 2 டேபிள் ஸ்பூன்
  •      தேங்காய் துருவல்- 2 டேபிள் ஸ்பூன்
  •      சோம்பு- 1/2 டீ ஸ்பூன்
  •      உப்பு- தேவையான அளவு
  •      எண்ணை- தேவையான அளவு
     குழம்புக்கு:
  •      பெரிய வெங்காயம்- 2
  •      நன்கு பழுத்த தக்காளி- 3
  •      புளி- பெரிய நெல்லிக்காய் அளவு
  •      மிளகாய்த்தூள்- 2 1/2 டீ ஸ்பூன்
  •      தனியாதூள்- 1 டீ ஸ்பூன்
  •      மஞ்சள்தூள்- 1/4 டீ ஸ்பூன்
  •      பூண்டு- 6 பல் 
  •      உப்பு- தேவையான அளவு
  •      கறிவேப்பிலை- சிறிதளவு
  •      மல்லித்தழை- சிறிதளவு
     தாளிக்க:
  •      கடுகு- 1/2 டீ ஸ்பூன்
  •      வெந்தயம்- 1/2 டீ ஸ்பூன்
  •      எண்ணை- 1/4 கப்
செய்முறை:
     முதலில் மரக்கறி தோசைக்கான அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறியதும் தண்ணீரை வடித்து விட்டு, மிளகாய், சோம்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். அத்துடன் நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை, தேங்காய் துருவல், சிறிது உப்பு சேர்த்து, இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.தோசைக்கல்லை காயவைத்து, மாவை சிறு சிறு தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணை ஊற்றி வேகவையுங்கள். 
     குழம்புக்கு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். வாணலியில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களை சேர்த்து, அவை சிவந்ததும் வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். அத்துடன் தக்காளி, தேவையான உப்பு, மிளகாய்த்தூள், தனியாதூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு, புளி கரைசலை சேர்த்து, பச்சை வாசனை போக கொதித்தபின், கறிவேப்பிலை, மல்லித்தழை சேருங்கள்.
     பரிமாறுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக, சுட்டு வைத்திருக்கும் மரக்கறி தோசைகளை குழம்பில் சேர்த்து, 5 நிமிடம் கழித்து பரிமாறுங்கள். தயிர்சாதத்திற்கு தொட்டுக்கொள்ள பிரமாதமான சைடு டிஷ் இது.