Thakkali Kothumai Dosai

தக்காளி கோதுமை தோசை



தேவையானவை:
  •      கோதுமை ரவை- 1 கப்
  •      தக்காளி- 2
  •      பச்சை மிளகாய்- 3
  •      இஞ்சி- 1 துண்டு
  •      கறிவேப்பிலை- சிறிதளவு
  •      மல்லித்தழை- சிறிதளவு
  •      உப்பு- தேவைக்கு
  •      எண்ணை- தேவைக்கு

செய்முறை:
     ரவையை அரை கப் தண்ணீரில், அரை மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு, அதிகப்படி நீரை வடித்து விட்டு, தேவையான தண்ணீர், தக்காளி, இஞ்சி, மிளகாய், உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். கறிவேப்பிலை,  மல்லித்தழை பொடியாக நறுக்கி அரைத்த மாவோடு சேர்த்து கலக்கி, மெல்லிய தோசைகளாக ஊற்றுங்கள். சுற்றிலும் எண்ணை ஊற்றி, இரு புறமும் திருப்பிபோட்டு மொறுமொறுப்பாக சுட்டெடுங்கள். கார சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார் என சகலத்தோடும் பொருந்தும் ஐட்டம் இது.