சும்மா குழம்பு
தேவையானவை:
- சின்ன வெங்காயம்- 2
- தக்காளி- 2
- புளி- சிறு நெல்லிக்காய் அளவு
- மிளகாய்த்தூள்- ஒன்றரை டீ ஸ்பூன்(மிளகாய்த்தூளுக்கு பதில் சாம்பார்தூளும் போடலாம்)
- தனியாத்தூள்- 1/2 டீ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- கறிவேப்பிலை- சிறிதளவு
- கடுகு- 1/2 டீ ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு- 1/2 டீ ஸ்பூன்
- வெந்தயம்- 1 சிட்டிகை
- சோம்பு(விருப்பப்பட்டால்)- 1 சிட்டிகை
- எண்ணை- 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். புளியை 2 கப் தண்ணீர் விட்டுக் கரைத்து, வடிகட்டுங்கள். எண்ணையைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேருங்கள். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அதனுடன் தக்காளி, தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கி, புளித் தண்ணீரை ஊற்றுங்கள். அதில் மிளகாய்த்தூள், தேவையான உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகக் கொதித்தபின், கறிவேப்பிலை சேர்த்து இறக்குங்கள். விருப்பப்பட்டால், 2 பூண்டுப் பல்லை தட்டிப் போடலாம். வாசமாக இருக்கும். செட்டிநாட்டு ஸ்பெஷலான இந்த சும்மா குழம்பு, சூடான இட்லிக்கேற்ற சூப்பரான காம்பினேஷன்.