சோயா சேமியா டிலைட்
தேவையானவை:
- சேமியா- 200 கிராம்
- சோயா- 10 உருண்டைகள்
- பெரிய வெங்காயம்- 2
- தக்காளி- 3
- பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் கலவை- 1 கப்
- தேங்காய்ப்பால்- ஒன்றரை கப்
- புதினா- 1 கைப்பிடி
- மல்லித்தழை- 1 கைப்பிடி
- பச்சை மிளகாய்- 5
- மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன்
- நெய்- 1 டேபிள் ஸ்பூன்
- எண்ணை- 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு- தேவைக்கு
- இஞ்சி- 1 துண்டு
- பூண்டு- 5 பல்
- பட்டை- 1 துண்டு
- லவங்கம்-2
- ஏலக்காய்- 3
செய்முறை:
நெய்யைக் காய வைத்து சேமியாவை வறுத்தெடுங்கள். சோயாவை கொதித்த நீரில் இரண்டு நிமிடம் போட்டு வையுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் போட்டு அலசி பிழிந்து எடுத்து வையுங்கள். அரைக்க கூறியுள்ள பொருட்களை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்தெடுங்கள். மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள். வெங்காயத்தை மெல்லிய நீள வில்லைகளாகவும், தக்காளியை பொடியாகவும் நறுக்குங்கள். எண்ணையைக் காயவைத்து மிளகாயை வதக்குங்கள். பிறகு வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்குங்கள். பிறகு சோயா, அரைத்த விழுது, புதினா, மல்லி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி தக்காளி, காய்கறி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து காய்கள் வேகும்வரை வதக்குங்கள். பிறகு தேங்காய்ப்பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வையுங்கள். கொதித்ததும் வறுத்த சேமியாவை சேர்த்து வேக வையுங்கள். பின்னர் கலவையை இறுக மூடி, மிதமான தீயில், 10 நிமிடம் வைத்து இறக்குங்கள். தயிர் பச்சடியோடு சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம்.