Spaanch Dosai

ஸ்பான்ச் தோசை


தேவையானவை:
  •      பச்சரிசி- 2 கப்
  •      உளுந்து- 1/4 கப்
  •      கெட்டியான அவல்- 3/4 கப் 
  •      வெந்தயம்- 2 டீ ஸ்பூன்
  •      தேங்காய் துருவல்- 1/2 கப்
  •      உப்பு- தேவைக்கு

செய்முறை:
     அவலை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வையுங்கள். அரிசி, உளுந்து, வெந்தயம், ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் அரிசி கலவையுடன், அவல், தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்து 5 முதல் 6 மணி நேரம் வைத்திருங்கள். புளித்துவிடும். பிறகு மாவை சற்று கனமான தோசைகளாக ஊற்றி, மூடி வைத்து, மிதமான தீயில் வேக வைத்தெடுங்கள். மெத்து மெத்தேன்றிருக்கும் இந்த தோசையை கார சட்னி, வடை கறியோடு கொடுத்தால், கூட ரெண்டு கேட்பார்கள் குழந்தைகள்.