Kaikari Pongal

காய்கறி பொங்கல்



தேவையானவை:
  •      பச்சரிசி- 1 கப்
  •      பாசிப்பருப்பு- 1 கப்
  •      பட்டாணி, மிகப்பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் மூன்றும் சேர்ந்த                   கலவை- 1 கப்
  •      பெரிய வெங்காயம்- 2
  •      தக்காளி- 2
  •      இஞ்சி- 1 துண்டு
  •      பெருங்காய கரைசல்- 1 டீ ஸ்பூன்
  •      நெய்- 1 டேபிள் ஸ்பூன்
  •      சீரகம்- 1/2 டீ ஸ்பூன்
  •      உப்பு- தேவைக்கு
தாளிக்க:
  •      மிளகு- 2 டீ ஸ்பூன்
  •      சீரகம்- 2 டீ ஸ்பூன்
  •      பட்டை- 2
  •      லவங்கம்- 2
  •      ஏலக்காய்- 2 
  •      முந்திரி- 10
  •      கறிவேப்பிலை- சிறிதளவு 
  •      நெய்- 2 டேபிள் ஸ்பூன்
  •      எண்ணை- 2 டேபிள் ஸ்பூன்
  •      உப்பு- தேவைக்கு

செய்முறை:
     அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து மூன்றரை கப் தண்ணீர், நெய், பெருங்காயம், சீரகம் சேர்த்து வேகவையுங்கள்.முக்கால் பதம் வெந்ததும் உப்பை சேருங்கள். பதமாக வெந்ததும் இறக்குங்கள். வெங்காயம், தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்குங்கள். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணை, நெய்யைக் காயவைத்து தாளிக்க கூறப்பட்டுள்ள பொருட்களையும், இஞ்சியையும் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, காய்களைச் சேர்த்து வேகும்வரை வதக்குங்கள். கடைசியாக தக்காளி சேர்த்து, சிறிது கிளறி பொங்கலைக் கொட்டி நன்றாக கிளறி இறக்குங்கள். சாம்பார், சட்னியோடு பரிமாறுங்கள். சாப்பிட்ட அத்தனை பேரிடமிருந்தும் 'பிரமாதம்' என்ற பாராட்டு கிடைப்பது நிச்சயம்.