தேவையானவை:
- புளி- எலுமிச்சை அளவு
- மிளகாய்த்தூள்- 3 டீ ஸ்பூன்
- பெருங்காயம்- 1/2 டீ ஸ்பூன்
- மஞ்சள்தூள்- 1/4 டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை- சிறிது
- உப்பு- தேவையான அளவு
- நல்லண்ணெய்- 1/4 கப்
- அப்பளம்- 3
தாளிக்க:
- கடுகு- 1/2 டீ ஸ்பூன்
- வெந்தயம்- 1/2 டீ ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு- 1 டீ ஸ்பூன்
- துவரம்பருப்பு-1 டேபிள் ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 4
- எண்ணை- 1/4 கப்
செய்முறை:
புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். அப்பளத்தை ஒன்றிரண்டாக ஒடித்து வைத்துக்கொள்ளுங்கள். எண்ணையைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களை சேருங்கள். இது இளம் பொன்னிறமானதும், அப்பளத்தைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து, புளித்தண்ணீரைச் சேருங்கள்.அத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்க விட்டு இறக்குங்கள்.
வாசனை ஆளைத்தூக்கும் அட்டகாசமான குழம்பு இது.