Pudalankaai Adai

புடலங்காய்  அடை


தேவையானவை:
  •      பச்சரிசி- 1/2 கப்
  •      புழுங்கல் அரிசி- 1/2 கப்
  •      துவரம் பருப்பு- 3/4 கப்
  •      கடலைப் பருப்பு- 3/4 கப்
  •      பாசிப் பருப்பு- 1/4 கப்
  •      உளுந்து- 1/4 கப்
  •      பிஞ்சு புடலங்காய் விதை(நாரோடு)- ஒரு கைபிடி
  •       மிளகாய் வற்றல்- 10
  •      சோம்பு அல்லது பெருங்காயம் 1 டீ ஸ்பூன்
  •      தேங்காய் துருவல்- 1/2 கப்
  •      பொடியாக நறுக்கிய மல்லித்தழை- 1/2 கைபிடி
  •      உப்பு- தேவைக்கு
  •      எண்ணை- தேவைக்கு

செய்முறை:
     அரிசி வகைகள், க.பருப்பு, து.பருப்பு ஆகியவற்றை ஒன்றாகவும், பாசிப்பருப்பு, உளுந்து இவற்றை ஒன்றாகவும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். அரிசி கலவையை சோம்பு(அல்லது பெருங்காயம்) சேர்த்து அரையுங்கள். சற்று கரகரப்பாக அரைபட்டதும், பாசிப்பருப்பு கலவையை சேர்த்து ஒன்றிரண்டாக அரையுங்கள். கடைசியாக புடலை விதை, மிளகாயைச் சேர்த்து அரைத்தெடுங்கள். இதனுடன் உப்பு, தேங்காய்துருவல், பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து கரைத்து வையுங்கள். சற்று கனமான அடைகளாக ஊற்றி, எண்ணை ஊற்றி திருப்பிப் போட்டு எடுங்கள். விரும்பினால் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மாவுக்கலவையில் சேர்க்கலாம். சூடாக இருக்கும்போதே மேலே எண்ணை தடவி, கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால் சுவை அபாரம்தான்.