ரவா அடை
தேவையானவை:
- துவரம் பருப்பு- 1/2 கப்
- கடலைப் பருப்பு- 1/2 கப்
- பாசிப் பருப்பு- 1/2 கப்
- உளுந்து- 1/2 கப்
- வெள்ளை ரவை- 1 கப்
- சற்று புளித்த தயிர்- 1 கப்
- மிளகு- 2 டீ ஸ்பூன்
- சீரகம்- 1 டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை- சிறிதளவு
- பெருங்காயம்- சிறிதளவு
- நெய்- 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு தேவைக்கு
- எண்ணை- தேவைக்கு
செய்முறை:
பருப்புகளை ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடித்து சேருங்கள். இத்துடன் ரவை, தயிர், பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து, சிறு சிறு அடைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணை விட்டு இரு புறமும் திருப்பிப் போட்டு வேக வைத்தெடுங்கள். கார சட்னி, இட்லி மிளகாய்ப் பொடியுடன் சாப்பிடுங்கள். போதும் என்று நினைக்கவிடாது நாக்கு.