Paneer Patturaa

பனீர் பட்டுரா


தேவையானவை:
  •      மைதா- 2 கப்
  •      புளிக்காத தயிர்- 1/2 கப்
  •      சமையல் சோடா- 1 சிட்டிகை
  •      நெய்- 1 டேபிள் ஸ்பூன்
  •      சர்க்கரை- 1 டீ ஸ்பூன்
  •      உப்பு- தேவைக்கு
     ஷ்டபிங்குக்கு
  •      பனீர்- 200 கிராம்
  •      பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்- 1/2 கப்
  •      நறுக்கிய மல்லித்தழை- 1 டேபிள் ஸ்பூன்
  •      மிளகாய்த் தூள்- 1/2 டீ ஸ்பூன்
  •      மஞ்சள் தூள்- 1/2 டீ ஸ்பூன்
  •      சீரகத் தூள்- 1/2 டீ ஸ்பூன்
  •      உப்பு- தேவைக்கு
  •      எண்ணை- தேவைக்கு

செய்முறை:
     மாவுடன் சர்க்கரை, தயிர், உப்பு, சமையல் சோடா, நெய் (தேவையானால் சிறிதளவு தண்ணீர்) சேர்த்து பிசைந்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி அரை மணி நேரம் வைத்திருங்கள். பனீரைத் துருவுங்கள். அதனுடன் ஷ்டபிங்குக்கு கூறப்பட்டுள்ள மற்ற பொருட்களை சேர்த்து நன்றாக கலக்குங்கள். மாவுக்கலவையை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சற்று குழிவாக்கி, அதனுள்ளே சிறிதளவு பனீர் கலவையை வைத்து மூடி, சற்று கனமான பூரிகளாக தேயுங்கள். சூடான எண்ணையில் பொரித்தெடுங்கள். பருப்புக் கரைசல், ஊறுகாயுடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும்.