மிளகாய்த்தூள்- ஒன்றரை டீ ஸ்பூன்(மிளகாய்த்தூளுக்கு பதில் சாம்பார்தூளும் போடலாம்)
தனியாத்தூள்- 1/2 டீ ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை- சிறிதளவு
தாளிக்க:
கடுகு- 1/2 டீ ஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 1/2 டீ ஸ்பூன்
வெந்தயம்- 1 சிட்டிகை
சோம்பு(விருப்பப்பட்டால்)- 1 சிட்டிகை
எண்ணை- 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். புளியை 2 கப் தண்ணீர் விட்டுக் கரைத்து, வடிகட்டுங்கள். எண்ணையைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேருங்கள். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அதனுடன் தக்காளி, தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கி, புளித் தண்ணீரை ஊற்றுங்கள். அதில் மிளகாய்த்தூள், தேவையான உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகக் கொதித்தபின், கறிவேப்பிலை சேர்த்து இறக்குங்கள். விருப்பப்பட்டால், 2 பூண்டுப் பல்லை தட்டிப் போடலாம். வாசமாக இருக்கும். செட்டிநாட்டு ஸ்பெஷலான இந்த சும்மா குழம்பு, சூடான இட்லிக்கேற்ற சூப்பரான காம்பினேஷன்.
கொய்யாப் பழங்களை கழுவி துடைத்து சிறு துண்டுகளாக நறுக்குங்கள். மிக்ஸ்சியில் கொய்யாத் துண்டுகள், எலுமிச்சம் பழச்சாரு, சர்க்கரை, உப்பு, மிளகாய்த்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி, குளிர வையுங்கள். பொடியாக நறுக்கிய புதினா அல்லது துளசி இலை சேர்த்து பரிமாறுங்கள். இதுவரை பருகியிராத சுவையில் அசத்தல் ஜூஸ்.
ஸ்ட்ராபெரி பழங்களை கழுவி துடைத்து, மிக்ஸ்சியில் சர்க்கரை சேர்த்து அரையுங்கள். அதனுடன் பால் சேர்த்து விப்பர் பிளேடால் இரண்டு, மூன்று முறை அடியுங்கள். பின்னர் ப்ரெஷ் கிரீம் சேர்த்து இரண்டு முறை அடித்து, குளிர வைத்து பரிமாறுங்கள்.
குறிப்பு:
ஸ்ட்ராபெரியின் விதை கரகரப்பு பிடிக்காதவர்கள், மில்க் ஷேக்கை வடிகட்டி, அத்துடன் ப்ரெஷ் கிரீம் சேர்த்து அடித்து பரிமாறுங்கள்.
சப்போட்டா பழங்களை கழுவி, தோல், விதை நீக்குங்கள். அந்தத்துண்டுகளை பால், சர்க்கரையுடன் மிக்ஸ்சியில் போடுங்கள். கொதிக்கும் வெந்நீர் 1/4 கப் எடுத்து, அதில் பாதாமை ஊற வைத்து, தோலை நீக்குங்கள். இந்த பாதாமையும் பால் கலவையுடன் சேர்த்து மிக்ஸ்சியில் நன்கு அரைத்து குளிர வைத்து பரிமாறுங்கள். குழந்தைகள், 'அம்மா, இன்னொரு கிளாஸ்!' என்று கேட்பார்கள்.
பேக்கிங் பவுடர், மைதா இரண்டையும் ஒன்றாக சலித்துக்கொள்ளுங்கள். சர்க்கரை, வெண்ணை இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்கு குழையுங்கள். அதனுடன் மைதா சேர்த்து பிசறுங்கள். கடைசியில் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து நன்கு பிசைந்து, சற்று கனமான சப்பாத்திகளாக இடுங்கள். சப்பாத்திகளை பிஸ்கட் கட்டரால் வெட்டி, எண்ணை தடவி, மைதா தூவிய ட்ரேயில் அடுக்கி, 'கேக் ஓவன்' இருப்பவர்கள் 160 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யுங்கள். 'கேக் ஓவன்' இல்லாதவர்கள் கடாயில் மணல் போட்டு சூடுபடுத்தி, அதன் மேல் பேக்கிங் பாத்திரத்தை வைத்து, அரைமணி நேரம் மூடி வைத்து பேக் செய்யவும். மேற்புறம் பொன்னிறமானதும் எடுக்கவும்.
அன்னாசிப் பழத்தை தோல், முள் நீக்கி பொடியாக நறுக்குங்கள். அதனுடன் சர்க்கரை கலந்து, அரை மணி நேரம் வையுங்கள். ரவையை 2 டீ ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்தெடுங்கள். மீதமுள்ள நெய், எண்ணையை காய வைத்து முந்திரிப்பருப்பை போட்டு தாளித்து, 3 கப் தண்ணீர் சேருங்கள். அதில் மஞ்சள் கலர் சேர்த்து, தண்ணீர் கொதித்ததும் வறுத்த ரவையைச் சேர்த்து கட்டி படாமல் கிளறுங்கள். நன்கு கிளறியபின், தீயைக் குறைத்து 5 நிமிடம் நன்கு வேக விடுங்கள். பின்னர் அன்னாசி, சர்க்கரை கலவையையும் அதில் சேருங்கள். இது சற்று இளகி, மீண்டும் கெட்டிப்படும். அதை நன்கு கிளறி, எசன்ஸ் சேர்த்து கலந்து பரிமாறுங்கள். விருந்துகளுக்கு ஏற்ற, சுவையான ஸ்வீட் இது.
வாணலியில் 1 டீ ஸ்பூன் எண்ணை விட்டு சேமியாவையும், மற்றொரு டீ ஸ்பூன் எண்ணையில் ரவையையும் தனித்தனியாக வருத்தேடுத்துக்கொள்ளுங்கள். இஞ்சியை பொடியாக நறுக்குங்கள். மீதமுள்ள எண்ணை, நெய்யை ஒன்றாக காய வைத்து கடுகு, உளுந்து, கடலைப்பருப்பை தாளியுங்கள். பொன்னிறமானதும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, 5 கப் தண்ணீர் ஊற்றுங்கள். அதில் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, பிறகு சேமியா சேர்த்து ஒரு நிமிடம் கிளறிய பிறகு ரவை சேருங்கள். தண்ணீர் வற்றியதும் மிதமான தீயில் மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கி ஆறியதும் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைத்தெடுங்கள். தக்காளித்தொக்கை தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் 'ஆஹா! அபாரம்' தான்.
மொச்சையை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து தோலை நீக்குங்கள். வெங்காயம், தக்காளியை நறுக்குங்கள். மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள். அடி கனமான பாத்திரத்தில் நெய், எண்ணையை காய வைத்து தாளிக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களைச் சேர்த்து தாளியுங்கள். பிறகு மிளகாய், மொச்சை, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி வெங்காயம், சிட்டிகை உப்பு, புதினா, மல்லி சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பின்னர் தேவையான உப்பு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி தேங்காய்ப்பால், 5 கப் தண்ணீர் சேருங்கள். தண்ணீர் கொதித்ததும் ரவையை சேர்த்து கிளறி, பாத்திரத்தை மூடி வைத்து, 15 நிமிடம் வேக வைத்து இறக்குங்கள். தயிர் பச்சடியுடன் பரிமாறுங்கள்.
சேமியாவை ஒரு டீ ஸ்பூன் எண்ணையில் வறுத்து கொதித்த நீரில் போட்டு வேக வைத்து வடித்து வையுங்கள். (வறுத்த செமியாவாக இருந்தால் மீண்டும் வருக்க வேண்டாம்) வெங்காயம், புதினா, தக்காளி, மல்லியை பொடியாக நறுக்குங்கள். 2 டேபிள் ஸ்பூன் எண்ணையில் கடுகை தாளித்து, பெருங்காயம், தக்காளியை வதக்குங்கள். உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சுருள கிளறி பிறகு சேமியா, சீரகத்தூள் சேர்த்து கிளறி இறக்குகள். மாவை சற்று கனமான தோசைகளாக ஊற்றி அதன் மேல் சேமியா கரைசலை சற்று பரவலாக வையுங்கள். அதன் மேல் புதினா, மல்லியைத் தூவி சற்று அழுத்தி விடுங்கள். சுற்றிலும் எண்ணை விட்டு, இரு புறமும் திருப்பிப்போட்டு வேகவைத்தெடுங்கள். தேங்காய் சட்னியோடு பரிமாறுங்கள். பார்க்க, ரசிக்க, ருசிக்க... சூப்பர் தோசை இது.
நெய்யைக் காய வைத்து சேமியாவை வறுத்தெடுங்கள். சோயாவை கொதித்த நீரில் இரண்டு நிமிடம் போட்டு வையுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் போட்டு அலசி பிழிந்து எடுத்து வையுங்கள். அரைக்க கூறியுள்ள பொருட்களை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்தெடுங்கள். மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள். வெங்காயத்தை மெல்லிய நீள வில்லைகளாகவும், தக்காளியை பொடியாகவும் நறுக்குங்கள். எண்ணையைக் காயவைத்து மிளகாயை வதக்குங்கள். பிறகு வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்குங்கள். பிறகு சோயா, அரைத்த விழுது, புதினா, மல்லி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி தக்காளி, காய்கறி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து காய்கள் வேகும்வரை வதக்குங்கள். பிறகு தேங்காய்ப்பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வையுங்கள். கொதித்ததும் வறுத்த சேமியாவை சேர்த்து வேக வையுங்கள். பின்னர் கலவையை இறுக மூடி, மிதமான தீயில், 10 நிமிடம் வைத்து இறக்குங்கள். தயிர் பச்சடியோடு சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம்.
பருப்புகளை ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடித்து சேருங்கள். இத்துடன் ரவை, தயிர், பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து, சிறு சிறு அடைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணை விட்டு இரு புறமும் திருப்பிப் போட்டு வேக வைத்தெடுங்கள். கார சட்னி, இட்லி மிளகாய்ப் பொடியுடன் சாப்பிடுங்கள். போதும் என்று நினைக்கவிடாது நாக்கு.
மிளகாய், மல்லி, கறிவேப்பிலை, உப்பு, எலுமிச்சம் பழச்சாரு சேர்த்து மைபோல அரைத்தெடுங்கள். இந்த விழுதை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். வடிகட்டிய நீரை அடுப்பில் வைத்து தளதளவென்று கொதிக்க வைத்து இறக்குங்கள். மாவுடன் நெய், கொதித்த மசாலா நீர்(ஆரக்கூடாது) சேர்த்து பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து ஆவியில் வேக வையுங்கள். கமகமக்கும் இடியாப்ப வாசமே அதன் ருசியைச் சொல்லும். சாம்பார், கத்தரி கொத்சுடன் சாப்பிட சுவை கூடும்.
பருப்பை குழைய வேக வையுங்கள். மல்லித்தழையை பொடியாக நறுக்குங்கள். மிளகாயுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்தெடுங்கள். பருப்பு மசியலுடன் மாவு, மல்லித்தழை, மிளகாய் விழுது, உப்பு, சீரகம், தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து, சற்று கனமான தோசைகளாக ஊற்றுங்கள். சுற்றிலும் எண்ணை விட்டு, திருப்பிப் போட்டு வேக வைத்தெடுங்கள். வெங்காயத் துவையல், மல்லி சட்னி, சாம்பார் போன்ற கார சார சமாச்சாரங்களைத் தொட்டுக் கொண்டால் நாக்கில் எச்சில் ஊரும்.
கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளுங்கள். அதனுடன் மைதா, உப்பு, நெய், சீரகம், சேர்த்து (தேயையனால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து) கெட்டியாக பிசையுங்கள். பிசைந்த மாவை சிறிது சிறிதாக எடுத்து சிறு சிறு பூரிகளாகத் தேய்த்து எண்ணையில் பொரித்தெடுங்கள். சன்னா மசாலா, குருமா போன்ற மசாலா சேர்த்த ஐட்டங்கள் இதற்கு தொட்டுக்கொள்ள இருந்தால் 'வெரி வெரி சூப்பர் தான்'.
அவலை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வையுங்கள். அரிசி, உளுந்து, வெந்தயம், ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் அரிசி கலவையுடன், அவல், தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்து 5 முதல் 6 மணி நேரம் வைத்திருங்கள். புளித்துவிடும். பிறகு மாவை சற்று கனமான தோசைகளாக ஊற்றி, மூடி வைத்து, மிதமான தீயில் வேக வைத்தெடுங்கள். மெத்து மெத்தேன்றிருக்கும் இந்த தோசையை கார சட்னி, வடை கறியோடு கொடுத்தால், கூட ரெண்டு கேட்பார்கள் குழந்தைகள்.
மாவுடன் சர்க்கரை, தயிர், உப்பு, சமையல் சோடா, நெய் (தேவையானால் சிறிதளவு தண்ணீர்) சேர்த்து பிசைந்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி அரை மணி நேரம் வைத்திருங்கள். பனீரைத் துருவுங்கள். அதனுடன் ஷ்டபிங்குக்கு கூறப்பட்டுள்ள மற்ற பொருட்களை சேர்த்து நன்றாக கலக்குங்கள். மாவுக்கலவையை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சற்று குழிவாக்கி, அதனுள்ளே சிறிதளவு பனீர் கலவையை வைத்து மூடி, சற்று கனமான பூரிகளாக தேயுங்கள். சூடான எண்ணையில் பொரித்தெடுங்கள். பருப்புக் கரைசல், ஊறுகாயுடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும்.
அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாக ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வையுங்கள். பிறகு இதனுடன் சுத்தம் செய்த கீரை, மிளகாய் சேர்த்து நைசாக அரைத்தெடுத்து, உப்பு சேர்த்து கரைத்து மூன்று மணி நேரம் வைத்திருங்கள். புளித்துவிடும். பிறகு சற்று கனமான தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணை விட்டு, திருப்பிப் போட்டு வேக வைத்தெடுங்கள். தேங்காய் சட்னி, கார சட்னி, பூண்டு சட்னி... இவற்றோடு சாப்பிட சுவை கூடும்.
பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வையுங்கள். மிளகாய், பெருங்காயம் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். அத்துடன் இரண்டரை கப் தண்ணீர், உப்பு, தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து கரைத்து வையுங்கள். வாணலியில் எண்ணை, நெய் ஒன்றாக ஊற்றி காயவைத்து, கடுகு, உளுந்து தாளித்து, கரைத்து வைத்துள்ள பருப்பு கலவையை ஊற்றுங்கள். கலவை தளதளவென்று, சற்று கெட்டிய கொதிக்கும்போது, ஒரு கையால் அரிசி ரவையை சேர்த்துக்கொண்டே, இன்னொரு கையால் கட்டி இல்லாமல் கிளறுங்கள். கலவையில் தண்ணீர் வற்றியதும் பாத்திரத்தை மூடி வைத்து, மிதமான தீயில், 15 நிமிடம் வேக வைத்து இறக்குங்கள். சற்று ஆறியதும் சிறிது சிறிதாக மாவை எடுத்து, கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி பானையில் வைத்து 10 நிமிடம் வேக வையுங்கள். சட்னி, சாம்பார், தக்காளி தொக்கு எல்லாவற்றுடனும் சாப்பிடலாம்.
அரிசி வகைகள், க.பருப்பு, து.பருப்பு ஆகியவற்றை ஒன்றாகவும், பாசிப்பருப்பு, உளுந்து இவற்றை ஒன்றாகவும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். அரிசி கலவையை சோம்பு(அல்லது பெருங்காயம்) சேர்த்து அரையுங்கள். சற்று கரகரப்பாக அரைபட்டதும், பாசிப்பருப்பு கலவையை சேர்த்து ஒன்றிரண்டாக அரையுங்கள். கடைசியாக புடலை விதை, மிளகாயைச் சேர்த்து அரைத்தெடுங்கள். இதனுடன் உப்பு, தேங்காய்துருவல், பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து கரைத்து வையுங்கள். சற்று கனமான அடைகளாக ஊற்றி, எண்ணை ஊற்றி திருப்பிப் போட்டு எடுங்கள். விரும்பினால் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மாவுக்கலவையில் சேர்க்கலாம். சூடாக இருக்கும்போதே மேலே எண்ணை தடவி, கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால் சுவை அபாரம்தான்.
ஆப்பிளை தோல், விதை நீக்கி பொடியாக நறுக்கி சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறுங்கள். கிளறும்போதே சற்று மசித்து விடுங்கள். சர்க்கரை நன்கு கரைந்து, சேர்ந்தாற்போல் வந்ததும் இறக்குங்கள். ப்ரெட்டின் ஓரங்களை நீக்கி மிக்ஸ்சியில் பொடியுங்கள். ஒரு பேக்கிங் பாத்திரத்தில் வெண்ணையை நன்கு தடவுங்கள். அதன் மேல் ப்ரெட் தூளை அரை அங்குல கனத்துக்கு போட்டு நன்கு அழுத்துங்கள். அதன் மேல் ஆப்பிள் கலவையை பரவினாற்போல் போடுங்கள். அதன் மேல் மீண்டும் ப்ரெட் தூளை கால் அங்குல கனத்துக்கு தூவி சற்று அழுத்துங்கள். 180 டிகிரி சென்டிகிரேடில் பொன்னிறமாகும் வரை பேக் செய்யுங்கள். பிரெஷ் க்ரீமுடன் பரிமாறுங்கள்.
'கேக் ஓவன்' இல்லாதவர்கள் கடாயில் மணல் போட்டு சூடுபடுத்தி, அதன் மேல் பேக்கிங் பாத்திரத்தை வைத்து, அரைமணி நேரம் மூடி வைத்து பேக் செய்யவும். மேற்புறம் பொன்னிறமானதும் எடுக்கவும்.
பருப்பை சற்று அதிக நீர் சேர்த்து மலர(குழையக்கூடாது) வேக வைத்து, பிறகு தண்ணீரை வடித்து தனியே வையுங்கள். பருப்புடன் மாவு, உப்பு, நெய், மிளகாய்த்தூள், கரம் மசாலா, மல்லித்தழை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக பருப்பு நீரை ஊற்றி பிசையுங்கள். பிசைந்த மாவை சிறு சிறு பூரிகளாக தேய்த்து எண்ணையில் பொரித்தெடுங்கள். பனீர் மசாலா, உருளை மசாலா, தால், சட்னி வகைகளுடன் சாப்பிட்டால் சுவை அள்ளும்.
ரவையை அரை கப் தண்ணீரில், அரை மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு, அதிகப்படி நீரை வடித்து விட்டு, தேவையான தண்ணீர், தக்காளி, இஞ்சி, மிளகாய், உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். கறிவேப்பிலை, மல்லித்தழை பொடியாக நறுக்கி அரைத்த மாவோடு சேர்த்து கலக்கி, மெல்லிய தோசைகளாக ஊற்றுங்கள். சுற்றிலும் எண்ணை ஊற்றி, இரு புறமும் திருப்பிபோட்டு மொறுமொறுப்பாக சுட்டெடுங்கள். கார சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார் என சகலத்தோடும் பொருந்தும் ஐட்டம் இது.
முதலில் மரக்கறி தோசைக்கான அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறியதும் தண்ணீரை வடித்து விட்டு, மிளகாய், சோம்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். அத்துடன் நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை, தேங்காய் துருவல், சிறிது உப்பு சேர்த்து, இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.தோசைக்கல்லை காயவைத்து, மாவை சிறு சிறு தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணை ஊற்றி வேகவையுங்கள்.
குழம்புக்கு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். வாணலியில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களை சேர்த்து, அவை சிவந்ததும் வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். அத்துடன் தக்காளி, தேவையான உப்பு, மிளகாய்த்தூள், தனியாதூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு, புளி கரைசலை சேர்த்து, பச்சை வாசனை போக கொதித்தபின், கறிவேப்பிலை, மல்லித்தழை சேருங்கள்.
பரிமாறுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக, சுட்டு வைத்திருக்கும் மரக்கறி தோசைகளை குழம்பில் சேர்த்து, 5 நிமிடம் கழித்து பரிமாறுங்கள். தயிர்சாதத்திற்கு தொட்டுக்கொள்ள பிரமாதமான சைடு டிஷ் இது.
புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். அப்பளத்தை ஒன்றிரண்டாக ஒடித்து வைத்துக்கொள்ளுங்கள். எண்ணையைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களை சேருங்கள். இது இளம் பொன்னிறமானதும், அப்பளத்தைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து, புளித்தண்ணீரைச் சேருங்கள்.அத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்க விட்டு இறக்குங்கள்.
கொடுத்திருக்கும் பொருட்களில், சின்ன வெங்காயம் முதல் உப்பு வரை அனைத்தயும் காயும் எண்ணையில் போட்டு வதக்கி எடுத்து, ஆறவிட்டு அரைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் எண்ணையை காய வைத்து, பட்டையைத் தாளித்து, அரைத்த மசாலாவில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து ஊற்றுங்கள். 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள்.
இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சூப்பரான குழம்பு இது.