Pasip Paruppu Dosai

பாசிப் பருப்பு தோசை 


தேவையானவை:
  •      பாசிப் பருப்பு- 2 கப்
  •      பட்டாணி, மிகையும் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ் கலவை- 1/4 கப்
  •      சின்ன வெங்காயம்- 1 கப்
  •      பச்சை மிளகாய்- 6
  •      இஞ்சி- 1 துண்டு
  •      சீரகத் தூள்- 3 டீ ஸ்பூன்
  •      மல்லித் தழை- சிறிதளவு
  •      உப்பு- தேவைக்கு
  •      எண்ணை- தேவைக்கு 
  
செய்முறை:
     பசி பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். வெங்காயம், மல்லித்தழையை பொடியாக நறுக்குங்கள். வெங்காயத்தை மாவில் கலக்குங்கள். சற்று கனமான தோசைகளாக ஊற்றி அதன் மேல் மல்லித்தழை, காய்கறி கலவையைத் தூவி சாரகத்தூளை தூவுங்கள். சுற்றிலும் எண்ணை விட்டு திருப்பிப் போட்டு வேக வைத்தெடுங்கள். சாம்பார், மல்லி சட்னியோடு பரிமாறுங்கள். இந்த 'ப்ரோடீன் ரிச்' தோசை சுவையிலும் 'ரிச்' தான்.

Saaththukudi Spaicy Juice

சாத்துகுடி ஸ்பைசி ஜூஸ்


தேவையானவை:
  •      சாத்துகுடி- 4
  •      புதினா- 6 முதல் 8 இலைகள்
  •      துளசி- 10 இலைகள்
  •      சீரகத்தூள்- 1/2 டீ ஸ்பூன்
  •      மிளகுதூள்- 1/4 டீ ஸ்பூன்
  •      உப்பு- 1/4 டீ ஸ்பூன்
  •      சர்க்கரை- சுவைக்கேற்ப

செய்முறை:
     சாதுகுடியை பிழிந்து சாறு எடுங்கள். துளசியை கால் கப் தண்ணீரில் அரைத்து வடிகட்டுங்கள். புதினாவை பொடியாக நறுக்குங்கள். மிளகுதூள், சீரகத்தூள், உப்பு, சர்க்கரை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, குளிரவைத்து பரிமாறுங்கள்.

Summa Kulambu

சும்மா குழம்பு


தேவையானவை:
  •      சின்ன வெங்காயம்- 2
  •      தக்காளி- 2
  •      புளி- சிறு நெல்லிக்காய் அளவு
  •      மிளகாய்த்தூள்- ஒன்றரை டீ ஸ்பூன்(மிளகாய்த்தூளுக்கு பதில் சாம்பார்தூளும் போடலாம்) 
  •      தனியாத்தூள்- 1/2 டீ ஸ்பூன்
  •      உப்பு- தேவையான அளவு
  •      கறிவேப்பிலை- சிறிதளவு
     தாளிக்க:
  •      கடுகு- 1/2 டீ ஸ்பூன்
  •      உளுத்தம்பருப்பு- 1/2 டீ ஸ்பூன்
  •      வெந்தயம்- 1 சிட்டிகை
  •      சோம்பு(விருப்பப்பட்டால்)- 1 சிட்டிகை
  •      எண்ணை- 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
     வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். புளியை 2 கப் தண்ணீர் விட்டுக் கரைத்து, வடிகட்டுங்கள். எண்ணையைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேருங்கள். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அதனுடன் தக்காளி, தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கி, புளித் தண்ணீரை ஊற்றுங்கள். அதில் மிளகாய்த்தூள், தேவையான உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகக் கொதித்தபின், கறிவேப்பிலை சேர்த்து இறக்குங்கள். விருப்பப்பட்டால், 2 பூண்டுப் பல்லை தட்டிப் போடலாம். வாசமாக இருக்கும். செட்டிநாட்டு ஸ்பெஷலான இந்த சும்மா குழம்பு, சூடான இட்லிக்கேற்ற சூப்பரான காம்பினேஷன்.

Koyyaap Pala Juice

கொய்யாப் பழ ஜூஸ் 


தேவையானவை:
  •      கொய்யாப் பழம்- 4 
  •      எலுமிச்சம் பழச் சாரு- 1 டேபிள் ஸ்பூன்
  •      புதினா இல்லை அல்லது துளசி இல்லை- 10
  •      சர்க்கரை- 3-4 டேபிள் ஸ்பூன்
  •      உப்பு- 1 சிட்டிகை
  •      மிளகு தூள்- 1/4 டீ ஸ்பூன் 

செய்முறை:
     கொய்யாப் பழங்களை கழுவி துடைத்து சிறு துண்டுகளாக நறுக்குங்கள். மிக்ஸ்சியில் கொய்யாத் துண்டுகள், எலுமிச்சம் பழச்சாரு, சர்க்கரை, உப்பு, மிளகாய்த்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி, குளிர வையுங்கள். பொடியாக நறுக்கிய புதினா அல்லது துளசி இலை சேர்த்து பரிமாறுங்கள். இதுவரை பருகியிராத சுவையில் அசத்தல் ஜூஸ்.

Straapery Milk Shake

ஸ்ட்ராபெரி மில்க் ஷேக்


தேவையானவை:
  •      காய்ச்சி குளிர வைத்த பால்- 2 கப்
  •      ஸ்ட்ராபெரி- 8
  •      ப்ரெஷ் கிரீம்- 1/2 கப்
  •      சர்க்கரை- சுவைக்கேற்ப 

செய்முறை:
     ஸ்ட்ராபெரி பழங்களை கழுவி துடைத்து, மிக்ஸ்சியில் சர்க்கரை சேர்த்து அரையுங்கள். அதனுடன் பால் சேர்த்து விப்பர் பிளேடால் இரண்டு, மூன்று முறை அடியுங்கள். பின்னர் ப்ரெஷ் கிரீம் சேர்த்து இரண்டு முறை அடித்து, குளிர வைத்து பரிமாறுங்கள்.
குறிப்பு:
     ஸ்ட்ராபெரியின் விதை கரகரப்பு பிடிக்காதவர்கள், மில்க் ஷேக்கை வடிகட்டி, அத்துடன் ப்ரெஷ் கிரீம் சேர்த்து அடித்து பரிமாறுங்கள்.

Sappotta Milk Shake

சப்போட்டா மில்க் ஷேக்


தேவையானவை:
  •      காய்ச்சிய பால்- 2 கப்
  •      நன்கு பழுத்த சப்போட்டா- 3
  •      பாதாம் பருப்பு- 8
  •      சர்க்கரை- தேவைக்கு 

செய்முறை:
     சப்போட்டா பழங்களை கழுவி, தோல், விதை நீக்குங்கள். அந்தத்துண்டுகளை பால், சர்க்கரையுடன் மிக்ஸ்சியில் போடுங்கள். கொதிக்கும் வெந்நீர் 1/4 கப் எடுத்து, அதில் பாதாமை ஊற வைத்து, தோலை நீக்குங்கள். இந்த பாதாமையும் பால் கலவையுடன் சேர்த்து மிக்ஸ்சியில் நன்கு அரைத்து குளிர வைத்து பரிமாறுங்கள். குழந்தைகள், 'அம்மா, இன்னொரு கிளாஸ்!' என்று கேட்பார்கள்.

Orange Piskat

ஆரஞ்சு பிஸ்கட்


தேவையானவை:
  •      மைதா- 1 கப்
  •      வெண்ணை- 75 கிராம்
  •      சர்க்கரை- 1/4 கப் 
  •      ஆரஞ்சு எசன்ஸ்- 2 டீ ஸ்பூன்
  •      பேக்கிங் பவுடர்- 1/4 டீ ஸ்பூன் 
  •      ஆரஞ்சு ஜூஸ்- 1/4 கப் 
    
செய்முறை:
     பேக்கிங் பவுடர், மைதா இரண்டையும் ஒன்றாக சலித்துக்கொள்ளுங்கள். சர்க்கரை, வெண்ணை இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்கு குழையுங்கள். அதனுடன் மைதா சேர்த்து பிசறுங்கள். கடைசியில் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து நன்கு பிசைந்து, சற்று கனமான சப்பாத்திகளாக இடுங்கள். சப்பாத்திகளை பிஸ்கட் கட்டரால் வெட்டி, எண்ணை தடவி, மைதா தூவிய ட்ரேயில் அடுக்கி, 'கேக் ஓவன்' இருப்பவர்கள் 160 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யுங்கள். 'கேக் ஓவன்' இல்லாதவர்கள் கடாயில் மணல் போட்டு சூடுபடுத்தி, அதன் மேல் பேக்கிங் பாத்திரத்தை வைத்து, அரைமணி நேரம் மூடி வைத்து பேக் செய்யவும். மேற்புறம் பொன்னிறமானதும் எடுக்கவும்.